Sunday, April 16, 2006

பிரச்சனையா ? தீர்வா ?

பிரச்சனையா ? தீர்வா ?

உங்களுக்கு ஒரு பிரச்சனை வந்துவிட்டது என்று வைத்துக்கொள்வோம், உங்கள் கவனம் பிரச்சனையில் இருக்குமா அல்லது அதற்க்கு தீர்வு காண்பதில் இருக்குமா.

பொரும்பாலோர், பிரச்சனையை சமாலிக்க இப்படி செய்யலாமா, அப்படி செய்யலமா என்று பலமாக யோசித்து, ஒரு சிரிய பிரச்சனைக்கு பெரிய தீர்வு கண்டு துவண்டு விடுவர். ஆனால் சற்று பொருமையாக யோசித்தால் மிக அருகிலேயே சிறிய சிறந்த தீர்வு இருக்கும்.

இதோ ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

NASA என்பது அனைவரும் அறிந்ததே. அது விண்வெளிக்கு அனுப்ப வஞ்ஞானிகளை தயார் படுத்திக்கொண்டிருந்தது. விண்வெளியில் பூஜ்ய புவி ஈர்ப்பு சக்தியால் பேனாவால் எழுத முடியாது என்பதால் (காரணம் அங்கு பேனாவில் இருக்கும் மை கீழ் நோக்கி பாயாது, மேல் நோக்கியே பாயும்) உடனடியாக ஒரு தனிக்குழு அமைக்கப்பட்டு பூஜ்ய புவி ஈர்ப்பு சக்தியிலும் எழுதும் பேனாவை கண்டு பிடிக்கும் பெரும் வேலை கொடுக்கப்பட்டது.

சுமார் 12 மில்லியன் அமெரிக்க டாலரை ஆராயிச்சியில் கொட்டி, பத்தே ஆண்டுகளில் (ஆமாம் 10 ஆண்டுகள்தான்) அந்த அதிசய எழுதுகோலை கண்டுபிடித்தனர். அது பூஜ்ய புவி ஈர்ப்பு சக்தியிலும் எழுதும், தண்ணீருக்கு அடியிலும் எழுதும், உறை பனியிலும் எழுதும்.

இந்த கண்டுபிடிப்பு அமெரிக்கா முழுவதும் பலரால் பாராட்டப்பெற்றது.

ஆனால், இதே பிரச்சனைக்கு ரஷ்யர்கள் எப்படி தீர்வு கண்டார்கள் தெரியுமா ?
அவர்கள் பென்சிலை பயன் படுத்தினார்கள்.


இப்போது புரிகிறதா,
பிரச்சனையில் கவனம் செலுத்துவதற்க்கும்
தீர்வில் கவனம் செலுத்துவதற்க்கும் உள்ள வித்தியாசம்.

2 Comments:

Blogger J S Gnanasekar said...

//அங்கு பேனாவில் இருக்கும் மை கீழ் நோக்கி பாயாது, மேல் நோக்கியே பாயும்//

விண்வெளியில் பூஜ்ய ஈர்ப்பு சக்தி உள்ள இடத்தில், 'மை கீழ்நோக்கிப் பாயாது' என்பது உண்மைதான். அதேபோல், ஈர்ப்பு சக்தி பூஜ்யம் என்பதால், 'மை மேல் நோக்கியும் பாயாது' (மை மேல் நோக்கிப் பாய்ந்தால், தலைகீழாக எழுதினால் போதுமே). அவ்விடத்தில் மை மீது செயல்படும் ஒரே விசை, மேல்பரப்பு இழுவிசை (Surface tension). எனவே, மை கோளவடிவில் சுருங்கிக் கொள்ளும்.

விண்வெளியில், ஆக்ஸிஜன் தொடர்ந்து கிடைக்குமாறு செய்து, தீக்குச்சியைப் பற்ற வைத்தாலும் இதே கதிதான்; கோளவடிவில் எரியும்.

ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சியில், இதுபோல பல ஆச்சரியங்களை நானும் கேள்விப்பட்டு உள்ளேன். நல்ல பதிவு. தொடருங்கள்.

அப்புடியே, நேரம் இருந்தா, நம்ம தளம்பக்கம் வந்து, 'அரபிக்கடலோரம்' அப்புடிங்கிற பதிவுல ஒரு விண்வெளி கேள்வி கேட்டிருக்கேன். பதில் சொல்லுங்க.

-ஞானசேகர்

6:21 AM  
Blogger மழைத்துளி said...

ஞானசேகர்,

உங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி.

நான் அரெபிக்கடலோரம் என்ற உங்களுடைய பதிவை படித்தேன்.
அருமையான பதிவு. மூளைக்கு நல்ல தீனி போடக்கூடிய பதிவு. கார்த்திக்வேலுவின் பதில் மிக மிக அருமை. நான் யோசிப்பதர்க்குள், அவரின் பதில் என் கண்களில் பட்டு படித்தே முடித்து விட்டேன்.

மேலும் இது போல பல ஆரோக்கியமான பதிவுகள் தொடர விருப்பம்.

- மழைத்துளி

7:30 AM  

Post a Comment

<< Home