Wednesday, July 26, 2006

உயிர் பிறியும் தருணம்

சமீபத்தில் நான் படித்ததில், மிகவும் நெஞ்சை உறுக்கிய கவிதை:

காலையில் புறப்படும் போது
கால்களை கட்டிக்கொண்டு
கண்ணை கசக்கிய
ஒன்றறை வயது - என்
குழந்தை வாசலில்
காத்திருப்பாளோ - என்
வருகைக்காக!

வேலை முடிந்து
வீட்டுக்கு வரும்போது
வாங்கி வரும் இரண்டு
முழம் பூவினுள் தான்
இருக்கிறது எந்தன் உலகம்
என்பாளே என்னவள் -
எங்கே சென்று என்னை
தேடுவாள்!

இரண்டு நாளாய்
வரும்போது வாங்கவேண்டும்
என்று நினைத்து
நினைத்து மறந்துவிட்ட
அந்த ஒற்றை
தலையாட்டிப்பொம்மையை
என் மகளுக்காக - இனி
வாங்கவே முடியாதே!

கொஞ்சம் கொஞ்சமாய்
சேர்த்து சேர்த்து
சொந்தமாய் வீடு
கட்டவேண்டுமென்று

கண்ட கனவும்
காற்றோடு போய்விட்டதோ!

எனக்காக எதுவுமே வேண்டாம்
என்று சொல்லியே
எந்த கனவும் தனக்காக காணாத
என்னவளுக்கு என்ன
கொடுக்கப்போகிறேன் இறுதியாய்!

வாழ்க்கையைத்
தேடித்தேடியே பழகிவிட்ட
எனக்கு -
எந்தன் உடலையும்
தேடித்தான் கண்டுப்பிடிப்பார்களே
எந்தன் உறவினர்கள்!

சொல்லிக்கொண்டு
வருவதில்லைதான்
மரணம் - ஆனால்
உயிருடன் உடலையும்
உரித்து எடுத்துச்செல்ல
உடிமை கொடுத்தது
யாருக்கு?

என்னை இப்படி சிதைத்து
இங்கு வீசியெறிந்து
வேடிக்கை பார்க்கும்
எந்தன் சகோதரர்களே
இனியும் வேண்டாமே
இப்படி ஒரு
விளையாட்டு

எதைத் தேடி
இந்த பயணம்?

எதைச் சொல்லி
என்ன பயன்...

உயிர் பிரியும் தருணம்
உரக்க உச்சரித்தால்
மரண வாக்குமூலமாகி
விடுமோ என்ற
அச்சத்தில் -
நினைவு
மயங்கும் நொடியில்
தோன்றி மறைகிறது
எண்ணங்கள்

- மாதவன்

Thursday, April 20, 2006

சிந்திக்க

ஒரு தந்தை தன் சிறிய மகளோடு ஒரு பாலத்தை கடந்து கொண்டு இருந்தார். தன் மகளின் பாதுகாப்பிற்க்காக அவளிடம் 'என் கையை பிடித்துக்கொள், அப்போதுதான் பத்திரமாக பாலத்தை கடப்பாய்' என்றார்.
அதற்க்கு மகளோ, 'அப்பா நீங்கள் என் கையை பிடித்துக்கொள்ளுங்கள்' என்றாள். அதற்க்கோ தந்தை, நான் உன் கையை பிடிப்பதற்க்கும், நீ என் கையை பிடிப்பதற்க்கும் என்ன வித்தியாசம் என்றார்.

அதற்க்கு அந்த சிறுமி, 'ஆமாம் அப்பா, மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. நான் உங்கள் கையை பிடித்திருக்கும் போது ஏதேனும் நடந்தால் நான் உங்கள் கையை விட்டுவிட வாய்ப்புகள் அதிகம். ஆனால் நீங்கள் என் கையை பிடித்திருக்கும் போது எது நடந்தாலும் என் கையை தப்பி தவறி கூட விட்டு விட மாட்டீர்கள், நான் பயம் இல்லாமல் வருவேன்' என்றாள்.
தந்தையின் கண்களில் கண்ணீர்.

இது உறவைக்காட்டிகிறது, உறவின் பிணைப்பைக்காட்டுகிறது.

நீங்கள் விரும்பியவர் உங்கள் கையை பிடிக்க காத்திருக்காதீர்கள்,
நீங்கள் விரும்பியவர் கையை உடனே நீங்கள் சென்று பிடியுங்கள்.

- மழைத்துளி

Sunday, April 16, 2006

பிரச்சனையா ? தீர்வா ?

பிரச்சனையா ? தீர்வா ?

உங்களுக்கு ஒரு பிரச்சனை வந்துவிட்டது என்று வைத்துக்கொள்வோம், உங்கள் கவனம் பிரச்சனையில் இருக்குமா அல்லது அதற்க்கு தீர்வு காண்பதில் இருக்குமா.

பொரும்பாலோர், பிரச்சனையை சமாலிக்க இப்படி செய்யலாமா, அப்படி செய்யலமா என்று பலமாக யோசித்து, ஒரு சிரிய பிரச்சனைக்கு பெரிய தீர்வு கண்டு துவண்டு விடுவர். ஆனால் சற்று பொருமையாக யோசித்தால் மிக அருகிலேயே சிறிய சிறந்த தீர்வு இருக்கும்.

இதோ ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

NASA என்பது அனைவரும் அறிந்ததே. அது விண்வெளிக்கு அனுப்ப வஞ்ஞானிகளை தயார் படுத்திக்கொண்டிருந்தது. விண்வெளியில் பூஜ்ய புவி ஈர்ப்பு சக்தியால் பேனாவால் எழுத முடியாது என்பதால் (காரணம் அங்கு பேனாவில் இருக்கும் மை கீழ் நோக்கி பாயாது, மேல் நோக்கியே பாயும்) உடனடியாக ஒரு தனிக்குழு அமைக்கப்பட்டு பூஜ்ய புவி ஈர்ப்பு சக்தியிலும் எழுதும் பேனாவை கண்டு பிடிக்கும் பெரும் வேலை கொடுக்கப்பட்டது.

சுமார் 12 மில்லியன் அமெரிக்க டாலரை ஆராயிச்சியில் கொட்டி, பத்தே ஆண்டுகளில் (ஆமாம் 10 ஆண்டுகள்தான்) அந்த அதிசய எழுதுகோலை கண்டுபிடித்தனர். அது பூஜ்ய புவி ஈர்ப்பு சக்தியிலும் எழுதும், தண்ணீருக்கு அடியிலும் எழுதும், உறை பனியிலும் எழுதும்.

இந்த கண்டுபிடிப்பு அமெரிக்கா முழுவதும் பலரால் பாராட்டப்பெற்றது.

ஆனால், இதே பிரச்சனைக்கு ரஷ்யர்கள் எப்படி தீர்வு கண்டார்கள் தெரியுமா ?
அவர்கள் பென்சிலை பயன் படுத்தினார்கள்.


இப்போது புரிகிறதா,
பிரச்சனையில் கவனம் செலுத்துவதற்க்கும்
தீர்வில் கவனம் செலுத்துவதற்க்கும் உள்ள வித்தியாசம்.

Friday, April 14, 2006

என்ன எழுதுவது ?

இது வரை நான் எதுவும் எழுதியது இல்லை.
இப்போது எனது எழுத்துத்திறனை வளர்த்துக்கொள்ள எதாவது எழுதலாம் என்று துணிந்துவிட்டேன். இதுவரை படிப்பு எல்லாம் ஆங்கிலம் மூலம் படித்ததினால், இன்னும் சிரிது காலம் இப்படியே விட்டிருந்தால் பள்ளியில் படித்திருந்த தமிழ் சுத்தமாக மறந்திருக்கும்.

சரி, எழுதலாம் என்று முடிவாகிவிட்டது, ஆனால் என்ன எழுதுவது?
சினிமா ? - இதனால் என்ன பயன்.
காதல் ? - ஏற்கனவே பலரின் வாழ்க்கை இதனால் அழிந்தது போதாதா.

இப்படியாக யோசித்துக்கொண்டிருந்த போது, நமக்கு தெரிந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுதல், சமூகத்திற்க்கு பயன்படும் சிந்தனனகள், இப்படி உருப்படியாக எழுதலாம் என்று ஆசைப்படுகிறேன்.


இனி அடிக்கடி மழைத்துளியாய் செய்திகளை எதிர்ப்பருங்கள்.

திறமையா நல்லொழுக்கமா ?

திறமையைவிட நல்லொழுக்கமே மிகவும் போற்றப்படவேண்டியது.
ஏனெனில், திறமை என்பது கடவுள் கொடுத்த வரம். அது அறிவுத்திறனாக இருக்கலாம், வாய்த்திறனாகவும் இருக்கலாம்....
ஆனால், நல்லொழுக்கம் என்பது பிறப்பில் வருவதல்ல,
அது, அணு அணுவாக எண்ணத்தாலும், செயலினாலும், தெரிவிலும், துணிச்சலிலும், மன உருதியாலும் வளர்க்கப்படுகிறது.

இப்போது கூறுங்கள், எது சிறந்தது, திறமையா நல்லொழுக்கமா?

மழைத்துளி - தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த இனிய தமிழ் புத்தாண்டில் blog எனும் கடலில் வந்து கலப்பதில் மிக்க மகிழ்ச்சி. எனக்கு blog பற்றி சில நாட்களாக தான் தெரியும். இந்த கணிப்பொறி யுகத்திலும் தமிழ் இப்படி கொடி கட்டி பறப்பதை பார்ப்பதர்க்கு சந்தோஷமாக இருக்கிறது. அதிலும் 'தமிழ்மனம்' மற்றும் 'தேன்கூடு' வலைப்பதிவின் பங்கு மிகப்பெரியது.

இது என்னுடைய முதல் பதிவாதலால், பிழை இருப்பின் மன்னிக்கவும்.